Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருணாநிதி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் - குஷ்பு நம்பிக்கை


Murugan| Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:27 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்னும் ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 

 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,  காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவிலிருந்து விலகி, தற்போது காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருக்கும் நடிகை குஷ்பு நேற்று, காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “கலைஞர் கருணாநிதி நலமாக இருக்கிறார். அவருடைய உடலுக்கு புரோட்டின் சத்து தேவைப்படுகிறது. அதை மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என குஷ்பு கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :