திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (22:56 IST)

கருணாநிதியின் மனைவியும், ஸ்டாலின் மனைவியும் பெண் சிங்கங்கள் - ஹெச், ராஜா

தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் தலைமையில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடைவிதித்தது. ஆனால் தடையை மீறிச் சென்றதாக வேல்முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து விடுவித்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையின்  பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஹெச் ராஜா கலந்துகொண்டார் அப்போது பேசியதாவது :

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும் , ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும், தைரியசாலிகளாக உள்ளனர். ஆனிமிகத்தைக் கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள் எனத் தெரிவித்தார்.