Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவை விட கருணாநிதியே சிறந்த தலைவர்: தீபக் பரபரப்பு பேட்டி!

ஜெயலலிதாவை விட கருணாநிதியே சிறந்த தலைவர்: தீபக் பரபரப்பு பேட்டி!


Caston| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (16:16 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட தலைவர் கருணாநிதியே சிறந்த தலைவர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இன்று காலை போயஸ் கார்டனில் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அங்கு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தீபா. தீபக் அழைத்ததால் தான் வந்ததாகவும். தீபக் சசிகலாவுடன் திட்டம் தீட்டி என்னை இங்கே வரவழைத்து அடித்து துறத்தியதாக தீபா குற்றம் சாட்டினார். மேலும் பல குற்றச்சாட்டுகளை தீபா தனது தம்பி தீபக் மீது வைத்தார்.
 
இந்நிலையில் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு தீபக் பேட்டியளித்து விளக்கமளித்தார். அந்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார், தினகரன் தேவையில்லை. போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற முடிவு செய்தால் ஆதரிப்பேன்.
 
ஜெயலலிதா 1991-க்கு முன்னர் வாங்கிய சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு. குடும்ப சண்டையை போய் பிரதமரிடம் முறையிட முடியுமா என்று தீபாவுக்கு தீபக் கேள்விஎழுப்பினார். மேலும் ஜெயலலிதாவை விட சிறந்த தலைவர் கருணாநிதி என்றும் தீபக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :