1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:13 IST)

கருணாநிதி உடல்நலம் பாதிப்பு; யாரும் பார்க்க வர வேண்டாம்; திமுக தகவல்

திமுக தலைவர் கருணநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
 
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
 
வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஒன்றை எடுத்துக்கொள்ள தவறியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கருணாநிதி சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருவதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.