வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (18:31 IST)

கட்சி தலைமைக்கு எதிராக கருத்து கூறிய கார்த்திக் சிதம்பரம்: பெரும் சலசலப்பு!

காங்கிரஸ் கட்சியின் சரியான வகையில் செயல்பட வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பீகார் மாநில தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, அடுத்து வரும் தேர்தலில் சுதாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது தான் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்திருந்தார் 
 
மேலும் பாஜகவுக்கு மாற்றான கட்சி காங்கிரஸ் என்பதை மக்கள் மறந்து விட்டார்கள் என்றும் காங்கிரஸ் சுய விசாரணை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் சரியான நேரத்தில் செயல்பட்டு காங்கிரஸ் கட்சி மீள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த கருத்துக்கு கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கபில் சிபல் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்தால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது