1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (18:44 IST)

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆப்பு வைக்க தொடங்கிய கர்நாடகா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என கர்நாடக மாநிக முதல்வட் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 
காவிரி தொடர்பான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-
 
காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால் மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கும். காவிரி பாசன மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
 
உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளதே தவிர குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்று கூறியுள்ளார்.