வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (17:19 IST)

தியேட்டரில் ‘கபாலி’ ராட்சத பலூன் வெடித்து 4 பேர் காயம்

நடிகர் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகெங்கிலும், 5000க்கும் மேற்பட்ட வெள்ளிக்கிழமை [ஜூலை 22] வெளியாகிறது.
 

 
இப்படத்தின் விளம்பரம் எந்த படத்திற்கும் இல்லாத அளவில் பிரமாண்டமாக இருந்தது. ஏர் ஏசியா விமானம், முத்தூட் பின்கார்ப் தங்க நாணையம், ஏர்டெல் செல்போன் வாடிக்கை சேவை, பைவ் ஸ்டார் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
இதுதவிர, ரசிகர்களும் படம் வெளியான தியேட்டர்களில் ரஜினியின் கட்அவுட், பேனர், ராட்சத பலூன் என பிரமாண்டப்படுத்தினர்.
 
இந்நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ரம்பா திரையரங்கின் மாடியில், ரஜினி ரசிகர்கள் சார்பில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், தியேட்டர் ஊழியர் ஆசைத்தம்பி, பலூன் உரிமையாளர் அக்பர் அலி (34), அவரிடம் வேலை செய்யும் விக்னேஷ் குமார் (19), சிவக்குமார்(20) ஆகியோர், அந்த பலூனை கீழே இறக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர்.
 
பலூனிலிருந்த வாயுவை வெளியேற்றிய போது, திடீரென பலூன் வெடித்தது. இதில் 4 பேரும் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.