திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (13:33 IST)

துப்பாக்கி சூடு சம்பவம் - குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும் குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும்  குமரி மீனவர்கள் பலர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.