1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (13:31 IST)

கொரோனா பிரச்சினையால் வாட்ஸ் அப் மூலமாக விபச்சாரம்! – சிபிசிஐடி அலுவலகம் அருகே சம்பவம்!

கன்னியாக்குமரியில் வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு விபச்சாரம் செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு பலர் விபச்சாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அழகு நிலையம், மசாஜ் செண்டர்கள் பெயரில் நடத்தப்பட்ட விபச்சார செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள ஒரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து சிலர் விபச்சார தொழிலை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனை மேற்கொண்ட போலீஸார் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 4 ஆண்கள், 3 பெண்களையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டிணம் போன்ற பகுதிகளில் இருந்து பெண்களை பைக்கிலேயே கன்னியாக்குமரிக்கு அழைத்து வந்து அவர்களது புகைப்படங்களை வாட்ஸப் மூலமாக பலருக்கு அனுப்பி, அவர்களுக்கு விருப்பமான பெண்களை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார் மற்ற மாவட்டகளிலும் இது பெரும் நெட்வொர்க்காக செயல்படலாம் என்பதால் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.