புத்தாண்டின் முதல் சூரிய உதயம்! – குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் ஆண்டின் முதல் நாளை பலரும் சூரிய உதயத்துடன் கொண்டாடியுள்ளனர்.
ஆண்டுதோறும் பல சிக்கல்கள், பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் ஒவ்வொரு ஆண்டும் முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும்போது அது மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டின் முதல் நாளை கொண்டாட்டமாக தொடங்குகின்றனர்.
தற்போது 2022ம் ஆண்டு விடைபெற்று 2023ம் ஆண்டிற்குள் காலடியெடுத்து வைத்துள்ள நிலையில் மக்கள் பலரும் அதை கொண்டாட்டத்தோடு தொடங்கியுள்ளனர். பலரும் கோவில்கள், தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு தங்கள் நாளை தொடங்கியுள்ளனர்.
மேலும் பலர் புத்தாண்டின் முதல் நாளின் முதல் சூரிய உதயத்தை காண பெரும்பாலான கடற்கரைகளில் கூடியுள்ளனர். கன்னியாக்குமரியில் முக்கடல் சந்திக்கும் பகுதியில் புத்தாண்டில் சூரிய உதயத்தை காண மக்கள் குவிந்துள்ளனர். சூரிய உதயத்தில் கடல் அலைகளில் விளையாடியும், புகைப்படம் எடுத்தும் தங்களது நாளை உற்சாகமாக அவர்கள் தொடங்கியுள்ளனர்.
Edit By Prasanth.K