1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 4 மே 2015 (18:39 IST)

கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

சிலப்பதிகார போராளி என வர்ணிக்கப்படும், கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் கண்ணகி சிலையை அதிமுக தரப்பினர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும், தற்போது கண்ணகி சிலைக்கு அமைச்சர்களே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வது தமிழக அரசியல்  அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
கற்புக்கரசி கண்ணகியை வணங்கினால், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ள அதிமுக பொதுச் செயலாளர்   ஜெயலலிதா விடுதலை பெற வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் சிலர் ஆலோசனை கூறியதாகவும், அதன் காரணமாக, தேனி மாவட்டம், அருகே கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி அன்று தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அதிமுகவினர் சென்று வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, டி.கே.எம். சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, பி.வி.ரமணா, அப்துல் ரஹீம் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.