பிரதமரை ஓபிஎஸ் சந்தித்த காரணம்?: கனிமொழி கூறும் விளக்கம்


bala| Last Modified சனி, 20 மே 2017 (12:26 IST)
ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா மறைவையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கனிமொழி எம்.பி. இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,

 

பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தது முதல்வர் பதவிக்காகத்தானே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. அதிமுகவை பாஜக இயக்குவதை அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவே ஒப்புக்கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி. மசோதாவை திமுக எதிர்க்கும். முதல்வர் கனவில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக ஓபிஎஸ் கூறுகிறார். தேர்தல் வந்தால் யார் கனவில் இருந்தார்கள் என்ற உண்மை தெரியும் என்று கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :