அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்: திமுக எம்பி கனிமொழி பேட்டி..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஏற்கனவே அண்ணாமலைக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் இன்று ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி சொத்து விபரத்தை வெளியிட்ட அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் என்று கனிமொழியும் பேட்டி அளித்துள்ளார்.
இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நானும் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன் என்றும், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Siva