1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:15 IST)

டிஎன்பிஎஸ்சி-இல் மொழிப்பாடம் நீக்கம்: கனிமொழி கண்டனம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது என்றும் அதற்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2  பிரதானத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக திருக்குறல் உள்பட பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
முதல்நிலை தேர்வில் இருந்த தமிழ், பிரதான தேர்வுக்கு கொண்டு வந்திருப்பதாலும், திருக்குறள் மட்டுமே ஒரு தாள் முழுவதும் எழுதும் வகையில் பிரதான தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் தெரியாத வேற்று மொழியினர் உள்ளே வருவது சாத்தியமில்லை என்று கல்வியாளர்கள் இந்த அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
 
 
மேலும் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்றும், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் மொழி சார்ந்த பகுதிகள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டதால் முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது
 
இந்த விளக்கத்தை அளித்தும் எதிர்க்கட்சிகள் இந்த மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். மேலும் தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும் என்றும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
 
 
தமிழே தெரியாதவர்கள் திருக்குறள் உள்ளிட்ட பாடங்கள் அடங்கிய பிரதான தேர்வில் எப்படி தேர்வாக முடியும் என்பதே கனிமொழிக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் எதிர்க்கேள்வியாக உள்ளது