கனிமொழியை கைது செய்த போலீஸார்


bala| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:36 IST)
ரேசன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்திய கனிமொழி மற்றும்  வாகை சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர்.

 

சமீபகாலமாக ரேசன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்யாவசியப் பொருட்கள விநியோகிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவை மக்களுக்கு வழங்கப்படுவதில்லை.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ரேசன் கடைகளை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரேஷன்கடையை திமுக எம்.பி.,கனிமொழி தலைமையில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருவான்மியூரில் எம்.எல்.ஏ வாகை சந்திரசேகரன், சிந்தாதிரிப்பேட்டையில் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட  ஏராளமான திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :