திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (21:34 IST)

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி: அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த கனிமொழி

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருக்கு வாக்கு சேகரித்து தேசிய தலைவர்களும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய அண்ணாமலை, செந்தில் பாலாஜி எல்லாம் ஒரு ஆளா அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்றும் என்னுடைய இன்னொரு முகம் இருக்கிறது என்றும் அது கர்நாடக முகம் என்றும் அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார் 
 
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் வகையில் அண்ணாமலை பேசியதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போடிநாயக்கனூரில் இன்று திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி, திமுக உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது