செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:16 IST)

கல்குவாரியில் பாறைகள் சரிவு; 4 பேர் பலி! – இடர்பாடுகளில் சிக்கிய பலர்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு

கோப்புப்படம்

காஞ்சிபுரத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் பலர் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் வழக்கமான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென பாறைகள் சரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாறைகள் விழுந்ததால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாறைகளுக்கு அடியில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் சிக்கியுள்ளதாகவும், மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாறைகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.