1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:49 IST)

நிரம்பிய 67 ஏரிகள்: காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு வெள்ள அபாயம்?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணித்துறை தகவல். 
 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் என 67-க்கும் அதிகமான நீர்நிலைகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது. 
 
மீதமுள்ள 125 ஏரிகள் 75%, 206 ஏரிகள் 50%, 180 ஏரிகள் 25%, 324 ஏரிகள் 25% குறைவாகவும் நிரம்பியுள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.