Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நந்தினிக்கு நியாயம் கேட்கும் கமல்ஹாசன் - நெட்டிசன்கள் பாராட்டு


Murugan| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (15:53 IST)
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி நந்தினிக்கு நியாயம் வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

 

 
அரியலூர் அருகே வசித்து வந்த தலித் சிறுமி நந்தினியை(16), இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசினர். 
 
இந்த விவாகரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் கொலையை கண்டித்து, ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் “ நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கருப்போ.. அது விஷயமில்லை. குற்றங்கள் நடப்பதற்கு கடவுள் காரணமில்லை. நான் முதலில் மனிதன். இரண்டாவதாக நான் இந்தியன்.
 
இந்த விவகாரம் தொடர்பாக, சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன். என் கோரிக்கை நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
சமீப காலமாக சமூகப் பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்து வருவதை நெட்டிசன்கள்  பாராட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :