திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:00 IST)

தமிழன் தலையில் கோமாளி குல்லா..போதுமா இன்னும் வேண்டுமா? - கமல்ஹாசன் அதிரடி

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைய இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த 6 மாதங்களாக பிரிந்திருந்த முதல்வர் எடப்படி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இன்று இணைய உள்ளன. ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது  கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
சமீப காலமாக அரசுக்கு எதிராக அவர் பல கருத்துகளை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ளதத்தான அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது.