1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:52 IST)

ஊழலலிருந்து விடுதலை பெறாத வரை நாம் அடிமைகளே - கமல்ஹாசன் பொளீர்

ஊழலில் இருந்து விடுதலை பெற நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.


 

 
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். முக்கியமாக ஊழல் பற்றி அவர் அதிகமாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். 
 
இந்நிலையில், ஒரு மாநிலத்தில் போதுமான ஊழல் மற்றும் துயர சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு பொறுப்பேற்று ஒரு முதல்வர் அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என ஏன் எந்த கட்சியும் வலியுறுத்தவில்லை? என அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த டிவிட்டில் “என் எண்ணம் என்பது நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான். அதிமுகவோ அல்லது திமுகவோ.. யார் என்னுடைய குரலை மேம்படுத்த யாருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. தற்போதுள்ள  கட்சிகள் சரியில்லை எனில், வேறு ஒன்றை தேட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மற்றொரு டிவிட்டில் “சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவரின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.