1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:05 IST)

சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் சிறைதான் - பிக்பாஸ் வீட்டில் யாரை கூறினார் கமல்ஹாசன்?

பிக்பாஸ் சீசன் 2வின் முதல் நிகழ்ச்சியான நேற்று நடிகர் கமல்ஹாசன் நடைமுறை அரசியலை கிண்டலடிப்பது போல் ஒரு கமெண்ட் அடித்துள்ளார்.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.   அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் முதல் நிகழ்ச்சி நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கியது.
 
அப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டார். அப்போது, அங்கே சிறை போன்ற ஒரு அறை உருவாக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் ‘ரொம்ப சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் சிறைதான் தண்டனை’ என்பதை விளக்கவே இந்த அறையை வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் என கிண்டலடித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவை மனதில் வைத்துதான் அவர் கிண்டலடித்தார் என பலரும் கூறி வருகின்றனர்.
 
பிக்பாஸ் முதல் சீசனிலும் ஒரு முறை ‘வசதியான சிறை வெளியே இருக்கிறது’ என கமல்ஹாசன் கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.