ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (17:25 IST)

கமலஹாசனை கடுப்பாக்கிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் குறித்த விவாதம் ஒன்று நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர் 
 
இந்த உரையாடலின்போது கேரளாவில் கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரள சுகாதாரத்துறைக்கு தான் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்தார், இந்த பாராட்டுக்களை ஏற்றுக்கொண்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, தமிழகத்திலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார் 
 
அதுவரை தமிழக அரசின் நடவடிக்கையை குற்றம் கூறிக்கொண்டிருந்த கமலஹாசன் கேரளா அமைச்சரின் இந்த கருத்தால் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாத கேரள அமைச்சர் தொடர்ந்து தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் சிறப்பான நடவடிக்கையை  எடுத்து வருவதாக கேரள அமைச்சர் கூறியது கமலஹாசனும் கடுப்பாக்கியது. இதனால் நிகழ்ச்சியின் இடையே சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது