1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (13:32 IST)

ரஜினி அமோதித்தால்... கமலுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஆசை!

ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என்ற கேள்விக்கு கமல் பதில். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித் தனியாகவோ அல்லது இணைந்தோ போட்டியிடப் போவது உறுதியாகி விட்டது. திமுக அதிமுகவை அடுத்து ரஜினி, கமல் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் அரசியல் குறித்தும் திமுக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கமலஹாசனின் அரசியலை இரு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி கேட்டுக் கொண்டால் மறுப்பதற்கில்லை என கூறினார். இதன் மூலம் கமலுக்கு முதல்வர் வேட்பாளர் ஆக அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்துள்ளது.