ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (19:53 IST)

ஸ்டாலின், உதயநிதியுடன் கமல் சந்திப்பு!

ஸ்டாலின், உதயநிதியுடன் கமல் சந்திப்பு!
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பலர் சந்தித்து வருகிறார்கள் என்ற செய்தியை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் சற்று முன் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் சில நிமிடங்கள் அவர் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த சந்திப்பின்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி முக ஸ்டாலின் ஒரு நல்ல நண்பர் என்ற முறையில் அவருக்கு தனது வாழ்த்தினை கமல்ஹாசன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கமல்ஹாசன் மீதும் முக ஸ்டாலின் மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே