Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் பகீர் தகவல்: ஜெயலலிதாவின் காலில் விழ வலியுறுத்தப்பட்டேன்!

கமல்ஹாசன் பகீர் தகவல்: ஜெயலலிதாவின் காலில் விழ வலியுறுத்தப்பட்டேன்!


Caston| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (20:20 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசியலில் அதிரடியாக இயங்கி வருகிறார். இந்நிலையில் தந்தி தொலைகாட்சியில் அவர் அளித்த பேட்டியில் பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

 
 
நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட பல இன்னல்களை சந்தித்தார். அந்த சமையத்தில் அவர் ஆளும் தரப்பால் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
 
விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சனை வந்தபோது நான் ஜெயலலிதாவிடம் தான் உதவியை எதிர்பார்த்தேன். ஆனால் பிரச்சனையே அங்கிருந்து தான் வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நான் அமைதியாக இருக்கவில்லை. தமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவது சாதாரண விஷயம் இல்லை. அதில் நான் வெற்றியும் பெற்றேன். ஆனால் அடுத்த நாளே எனது படத்துக்கு தடை வந்தது.
 
அப்போது என்னை அவரது காலில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். காலில் விழுவது எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் நியாயத்துக்கு நேர் மாறாய் எனக்கும், என் தொழிலுக்கும் துரோகம் செய்திருந்தால் பெற்றவளாய் இருந்தாலும் வணங்க மாட்டேன் என்றார் கமல்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :