செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜனவரி 2021 (11:23 IST)

கமல்ஹாசனின் அடுத்தகட்ட பிரச்சாரம்: நாளை முதல் எந்த மாவட்டத்தில்?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை தேர்தல் பிரச்சாரமும் வெள்ளி ஒருநாள் ஓய்வு எடுத்துவிட்டு சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் நாளை முதல் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். நாளை முதல் கமலஹாசன் செய்யவிருக்கும் பிரச்சாரம் குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 
 
புதிய வருடத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த ’சீரமைப்பும் தமிழகத்தை’ என்ற பிரகடனத்துடன் நமது தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமது மூன்று கட்ட சுற்றுப்பயணத்தை பெரும் மக்கள் எழுச்சியுடன் சந்தித்து தனது நான்காம் கட்ட பிரச்சாரத்திற்கு சேலம் மண்டலத்திற்கும் வேலுருக்கும் செல்லவிருக்கிறார் 
 
வருகிற ஜனவரி 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் சேலம் மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மேலூர் பகுதி சார்ந்த அனைத்து மண்டல செயலாளர்கள் மாநில மற்றும் மாவட்ட செயலாளர்களும் சார்பு அணிகளின் சார்ந்த செயலாளர்களும் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றி தலைவர் அவர்களின் வருகையை மிகவும் விமர்சையாக கொண்டாடி வரவேற்று பயணத்தை வெற்றி நிகழ்வாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்