ரஜினி மேல் கமலுக்கு அப்படி என்னதான் கோபம்?


sivalingam| Last Updated: ஞாயிறு, 19 நவம்பர் 2017 (23:03 IST)
ரஜினியும்,, கமலும் நண்பர்கள் என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும், ரஜினி மீது கமலுக்கு மனதளவில் போட்டியும், பொறாமையும் இருப்பதை பல பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வருகின்றனர். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றதோ தெரியாது, ஆனால் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

 


ரஜினி எதாவது செய்தால் உடனே அதை மறைக்கும் வகையில் கமல் பதிலுக்கு ஏதாவது செய்வது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ரஜினியின் '2.0' படத்தின் ஆடியோ விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக கமல் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதுதான்:

''ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்'' என்று டுவீட் செய்துள்ளார். வழக்கம்போல் பலருக்கும் இந்த டுவீட் புரியாது என்றாலும் ரஜினிக்கு போட்டியாக போட்ட டுவீட் என்று மட்டும் புரிவதால் ரஜினி மேல் அப்படி என்ன கமலுக்கு கோபக் என டுவிட்டரில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :