செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (11:43 IST)

செக்க செவேல் நிறத்தில் பிரச்சார வாகனம் ரெடி: கமல்ஹாசன் அதிரடி

செக்க செவேல் நிறத்தில் பிரச்சார வாகனம் ரெடி
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் என்பதும், அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து அல்லது ஒரு சில கட்சிகளுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதற்காக பிரச்சார வாகனம் ஒன்று தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
செக்கச்செவேலென்ற சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பிரச்சார வாகனத்தில் ஏசி உள்பட அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் இந்த வாகனத்தில் தான் தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த பிரச்சார வாகனம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது