திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:31 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: கமல்ஹாசன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

Kamal
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டத்தை கமல்ஹாசன் கூட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் ஆகி வரும் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கமலஹாசனிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்கும் என்றும் கமல்ஹாசனும் அதற்கு ஒப்புக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி குறித்து ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran