Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் டுவிட்டரில் உருக்கம்: அண்ணன் கண்ட கனவுகள்!

கமல்ஹாசன் டுவிட்டரில் உருக்கம்: அண்ணன் கண்ட கனவுகள்!


Caston| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (21:21 IST)
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
 
தனது அண்ணன் சந்திரஹாசனின் மறைவையொட்டி நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 
கமல்ஹாசனின் சினிமா பயணத்தில் சந்திரஹாசனின் பங்களிப்பு மிகப்பெரியது. கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திலும் சந்திரஹாசன் இயக்குனராக பதவி வகித்து வந்தார். அவருடைய வயது 82 ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :