1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (10:22 IST)

39 தொகுதிகளுக்கும் கமல்ஹாசனின் சூறாவளி சுற்றுப்பயணம்! – திமுக போட்ட பலே ப்ளான்!

MK Stalin Kamal
திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் – திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டணி உறுதியான நிலையில் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக கமல்ஹாசனின் சூறாவளி சுற்றுப்பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தால் அனைத்துத் தொகுதிகளில் உள்ள ம.நீ.ம உறுப்பினர்களையும் சுறுசுறுப்பாக்க முடியும் என கமல்ஹாசனும் திட்டமிட்டு வருகிறாராம்.

Edit by Prasanth.K