Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல விஷயங்களில் ரஜினிகாந்த் நழுவுகிறார் - கமல்ஹாசன் ஒப்பன் டாக்

Last Updated: திங்கள், 12 மார்ச் 2018 (15:14 IST)
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பல விஷயங்களில் கருத்து கூறாமல் மௌனம் காக்கிறார் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு பிரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். பொதுமக்கள் நன்கு பயிற்சி பெற்று மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அவர் கூறினார்.
 
அப்போது ஒரு நிருபர், காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் ரஜினிகாந்த் பதில் கூற மறுக்கிறாரே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இந்த விஷயத்தில் மட்டுமல்ல. பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்” எனக் கூறினார்.
 
ரஜினியும், கமல்ஹாசனுன் நீண்ட வருட நண்பர்கள். எனவே, ஒருவரையொருவர் தாக்கியோ, தவறாகவோ அவர்கள் எங்கும் இதுவரை விமர்சித்ததில்லை. இந்நிலையில், தற்போது இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டதால், முதல் முறையாக ரஜினியை பற்றி கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :