வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:08 IST)

நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்: கமல்ஹாசன் டுவீட்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் மற்ற கட்சிகளெல்லாம் இன்னும் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போது செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் 
 
முதல் தலைவராக பிரசாரத்தை அவர் தொடங்கி உள்ள நிலையில் அவருக்கு மக்களின் பேராதரவு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுரை ஆண்டிபட்டி தேனி சிவகங்கை விருதுநகர் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசனின் பேச்சை கேட்க இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் பேச்சின் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக குறித்தும் எம்ஜிஆர் குறித்து பேசியதற்கு அதிமுகவினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கிணறு புனரமைப்பு இயக்கத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் கூறியிருப்பதாவது: ஊர்க் கிணறு புனரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளைச் சீரமைத்திருக்கிறார்கள். நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.