Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல், ரஜினியால் கவுன்சிலர் கூட ஆக முடியாது. தனியரசு எம்.எல்.ஏ

வெள்ளி, 28 ஜூலை 2017 (23:29 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நிச்சயம் வெகுவிரைவில் இணைந்து அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து கட்சி ஆரம்பித்து, அந்த கட்சிக்கு அஜித், விஜய் ஆதரவு கொடுத்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்துவிடும் என்று சமீபத்தில் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார். அரசியல் விமர்சகர்களின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது.

kamal rajini" width="600" />

 
 
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று மாலை பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு எம்.எல்.ஏ., ‘’தமிழகத்தில் முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. சினிமா நடிகர்களை நம்பி அறியாமையில் மக்கள் வாக்களித்த காலம் முடிவடைந்து விட்டது. முன்னர், ஒப்பனையை உண்மை என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள். இப்போது அந்த நிலைமை இல்லை. அறிவு சார்ந்த அரசியலுக்கு மக்கள் வந்து விட்டார்கள். கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தால் அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது என்பதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலைமை' என்று கூறினார்.
 
கமல், ரஜினியை சீண்டாமல் அப்படியே விட்டால் கூட ஒதுங்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் மாறி மாறி இருவரையும் சீண்டுவது அரசியல்வாதிகள் சொந்தக்காசில் சூனியம் வைத்து கொள்வது போல என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சிப்ஸ் டப்பாவிற்குள் அடைத்து கடத்தி செல்லப்பட்ட ராஜ நாகங்கள்!!

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த ஒரு பார்சலை சோதனை மேற்கொண்டதில் அதில் இருந்து 3 ராஜ ...

news

பாகிஸ்தான் பிரதமாகிறார் நவாஸ் ஷெரீப் சகோதரர்!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் ...

news

திருக்குறளை எளிமையாய் எடுத்துரைக்க; Kural Bot பேஸ்புக் பக்கம்!!

சமூக வலைதளமான பேஸ்புக்கில் சிவசுப்பிரமணியம் என்பவர் Kural Bot என்னும் பக்கத்தை உருவாக்கி ...

news

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 ...

Widgets Magazine Widgets Magazine