செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (14:48 IST)

அனுமதி இன்றி நடத்தப்பட்ட மாணவியர் விடுதி: கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த திடுக் தகவல்

kaniyamur
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளி மாணவியின் மரணம் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி இந்த பள்ளி குறித்து விசாரணை செய்தபோது பள்ளியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது 
 
இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிடுவோம் என மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி உரிய அனுமதி இன்றி இயங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது