1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஐந்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு: சமூச சேவை செய்யும் கள்ளக்குறிச்சி நபர்!

five rupee meals
ஐந்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு: சமூச சேவை செய்யும் கள்ளக்குறிச்சி நபர்!
சாதாரண ஹோட்டல்களில் குறைந்தது 50 ரூபாய் சாப்பாடு என விற்பனையாகி வரும் நிலையில் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் கள்ளக்குறிச்சி நபர் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கள்ளக்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பவர் அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். இதனையடுத்து யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக மிக குறைந்த விலையில் சாப்பாடு வழங்க அவர் முடிவு செய்துள்ளார் 
 
5 ரூபாய்க்கும் சாம்பார், ரசம் ஊறுகாய் உடன் கூடிய அளவு சாப்பாடு அவர் கடந்த சில நாட்களாக வழங்கி வருகிறார். இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் 
 
ஒருவரின் வயிறு நிறைந்தால் போதும் அதுவே தனக்கு மனநிறைவு என குணசேகரன் இது குறித்து கூறியுள்ளார்.