1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (07:59 IST)

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கள்ளக்குறிச்சியில் தீபாவளிக்காக விற்பனை செய்வதற்காக பட்டாசு கடைகள் அதிக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் பல கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் போடப்பட்டிருந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது
 
இந்த தீவிபத்தில் கடை ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பதும் இருப்பினும் பட்டாசு கடையில் உள்ள அனைத்துப் பட்டாசுகளும் எரிந்து நாசமாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.