1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:10 IST)

என்னை யாரும் கடத்தவில்லை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி வீடியோ

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி வீடியோ
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவின் திருமணம் நேற்று நடந்தது. அவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்
 
இதனை அடுத்து சௌந்தர்யாவின் தந்தை தனது மகளை கடத்திக் கொண்டு அதிமுக எம்எல்ஏ திருமணம் செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நான் முழு சம்மதத்துடன் நான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் என்னுடைய முழு சம்மதத்துடன்தான் நேற்று திருமணம் நடந்தது என்றும் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விளக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது