செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (08:44 IST)

விவசாயிகள் நிதியில் மோசடி; 75 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம்!

கள்ளக்குறிச்சியில் மத்திய அரசின் விவசாயிகள் நிதி திட்டத்தில் ம்ோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில் 75 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றது குறித்து வேளாண்மைத்துறை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் சங்கராபுரம் தாலுக்கா அருகே உள்ள கணினி மையத்தில் முறைகேடாக அரசின் பயனாளர் ஐடி, கடவுசொல்லை பயன்படுத்தி விவசாயிகள் அல்லாதோரையும் நிதி திட்டத்தில் இணைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கணினி மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் கூறிய போது, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 75 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோரும் அடங்குவர். எனவே 75 ஆயிரம் வங்கி கணக்குகளை முடக்கி அதில் விவசாயிகள் அல்லோதாரை கண்டறிந்து அளிக்கப்பட்ட நிதி உதவியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.