திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:59 IST)

அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு : கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
கடந்த சில மாதங்களாக தந்தை பெரியார் சிலைகளுக்கு தீ வைப்பது, அவமதிப்பது, காவி சாயம் பூசுவது உள்ளிட்ட செயல்களில் மர்ம நபர்கள் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென அண்ணா சிலைக்கு அதே போன்ற அவமதிப்பு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கள்ளக்குறிச்சி அருகே பல ஆண்டுகளாக இருந்துவரும் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அண்ணா சிலைக்கு தெரிவித்த தகவல் தெரிந்ததும் அங்கு கூடிய பொதுமக்கள், தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் எனவே கலந்து செல்லும் படியும் கூறினர். இதனை அடுத்து பதற்றமான சூழல் தற்போது இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. அண்ணா சிலைக்கு தீ வைத்து இருப்பதை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது