வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (00:43 IST)

காலிங்கராயருக்கு அரசு விழா: ஜி.கே.நாகராஜ் கோரிக்கை

காலிங்கராயரை நினைவுகூறும் வகையில் அரசு விழா எடுக்க வேண்டும் காலிங்கராயரை நினைவுகூறும் வகையில் அரசு விழா எடுக்க வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பில் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய காலிங்கராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
 
கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பில் காலிங்கராயன் வாய்க்காலை விவசாயிகளுக்கு அர்ப்பணித்த 735 ஆம் ஆண்டு துவக்க நாளை   முன்னிட்டு வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயர் சிலைக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 
முன்னதாக காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டுக்கு காலிங்கராயரின் நேரடி வாரிசான அருண்குமார் காலிங்கராயர், அவரது மகன் சித்தார்த் காலிங்கராயர் மற்றும் ஜி.கே.நாகராஜ்,விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி காலிங்கராயன் வாய்க்காலுக்கு மரியாதை செய்தனர். அப்போது, ஜி.கே.நாகராஜ் பேசுகையில், காலிங்கராயர் மணிமண்டபத்திற்கு நிதிதுக்கிய தமிழக அரசின் செயல் பாராட்டத்தக்கது.
 
தமிழக அரசு சார்பில் காலிங்கராயன் வாய்க்காலை விவசாயிகளுக்கு அர்ப்பணித்த தை மாதம் 5 ஆம் நாளை காலிங்கராயரை நினைவுகூறும் வகையில் அரசு விழா எடுக்க வேண்டும் என்றார்.