Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் - என்னமா வேலை பாக்கிறாய்ங்க!

புதன், 13 செப்டம்பர் 2017 (09:41 IST)

Widgets Magazine

பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம் பெற்றிருந்த விவகாரம் அதிர்ச்சியை வரவழைத்துள்ளது.


 

 
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தங்களுடைய ஸ்மார்ட் கார்டை பெற்று வருகிறார்கள்.
 
இந்நிலையில், ஓமலூருக்கு அருகில் உள்ள கமலாபுரம் பகுதியில் வசிப்பவர் சரோஜா(42). இவர் சமீபத்தில் ரேஷன் கடைக்கு சென்று தனக்கான ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொண்டார். ஆனால், அதில் அவரின் புகைப்படத்திற்கு பதில், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
 
இது போல் சிலருக்கு, வேறு சில நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், மரங்கள், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
 
ஏற்கனவே, பலரின் ரேஷன் அட்டையில் பெயர் பதிவிடும் இடத்தில் பல தவறுகள் இடம் பெற்றிருப்பது வாடிக்கையான ஒன்று. தற்போது, புகைப்படத்திற்கு பதில் நடிகைகளின் படங்கள் இடம் பெற துவங்கியுள்ளது ஒரு பக்கம் அதிர்ச்சியையும், ஒரு பக்கம் சிரிப்பையும் வரவழைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற பெண் மரணம்

கடந்த 2004ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை ...

news

விரைவில் உண்மையான பொதுக்கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் நீக்கமா?

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் விரைவில் உண்மையான பொதுக்கூட்டம் ...

news

மெரினாவில் நள்ளிரவில் விபத்து: போதையில் கல்லூரி மாணவர்கள்

சென்னை மெரீனாவில் நள்ளிரவில் நடந்த விபத்து ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

news

ஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப் தியேட்டரில் முதல் அறிமுகம்

ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி ஐபோன் துறையில் ...

Widgets Magazine Widgets Magazine