திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:11 IST)

தந்தை பெரியாரின் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள்: கி.வீரமணி பேச்சு

50  ஆண்டுகளுக்குப் பிறகும் தந்தை பெரியாரின் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள் என சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த தந்தை பெரியார் 50ம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
 
 தந்தை பெரியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 
 
இந்த நிலையில் நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த தந்தை பெரியார் 50ம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
 
சுதந்திர நாட்டில் ஒருத்தன் உயர்ந்த ஜாதியாகவும், தாழ்ந்த ஜாதியாகவும் பிறக்கலாமா? என்று கேட்டார் பெரியார். மனிதநேயத்தை போற்றினார்.
 
மனு தர்ம ஆட்சி வரவேண்டும் என எண்ணுகிறார்கள். நாம் மனித தர்ம ஆட்சியை உருவாக்க நினைக்கிறோம்"
 
Edited by Siva