வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (10:46 IST)

ராமாயணம் வேண்டாம்: கோரிக்கை வைத்த கி.வீரமணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வீட்டில் இருப்பதை கணக்கில்கொண்டு 33 வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ராமாயணம் மகாபாரதம் ஆகியவை மீண்டும் தூர்தர்ஷனில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது 
 
இந்த ராமாயணம் தொடரை கோடிக்கணக்கான பொதுமக்கள் மிகவும் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்புவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
அரசு தொலைக்காட்சி ஒன்றில் ராமாயணத்தை ஒளிபரப்புவது தேவையற்ற ஒன்று என்றும் மத்திய அரசின் இந்து கண்ணோட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் கி வீரமணி கூறியுள்ளார். கி.வீரமணியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர் 
 
திராவிட கட்சி என்று கூறப்படும் திமுகவுக்கு சொந்தமான ஊடகங்களில் பல பக்தி தொடர்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது அதனை கண்டிக்காத கி வீரமணி தற்போது தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரை மட்டும் கண்டிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்
 
33 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரசு தொலைக்காட்சியில் தான் ராமாயணம் ஒளிபரப்பப்பட்டது அப்போது இந்த கண்டனத்தை கி வீரமணி தெரிவிக்காதது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இராமாயணத்திற்கு எதிராக பெரியாரின் படங்களை திக ஒரு டிவி ஆரம்பித்து அதில் ஒளிபரப்பலாம் என்றும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது