தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் – சொந்த ஊரில் வாக்களித்த கே எஸ் அழகிரி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே வாக்கு செலுத்தினார்.
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை சொந்த தொகுதிகளில் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் அவர் வாக்களித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடைபெறும் தேர்தல் தமிழகத்தின் அடையாளம், கலாசாரம் மற்றும் தமிழர்களின் பெருமையையும் காப்பாற்றவும் நடைபெறக்கூடிய தேர்தல் என்று கூறியுள்ளார்.