Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ். ஆட்சியை பிடிப்பது எப்படி? வழக்கறிஞருடன் பாண்டியராஜன் தீவிர ஆலோசனை


Abimukatheesh| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:22 IST)
எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை அடுத்து ஓ.பி.எஸ். அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் மூத்த வழக்கறிஞருடன் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டார்.

 

 
சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதனால் ஓ.பி.எஸ். அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து சசிகலா அணியில் இருந்து ஓ.பி.எஸ். அணிக்கு வந்த மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் தீவிர ஆலோசனை செய்துள்ளார்.
 
ராஜினிமா செய்த ஓ.பி.எஸ். அவரது ஆட்சி தொடர என்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :