1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:19 IST)

ஓ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் பாக்யராஜ்!

k bhagyaraj
ஓ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் பாக்யராஜ்!
பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் கே பாக்யராஜ் சற்றுமுன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 
 
எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்த கே பாக்யராஜ் இடையில் சில காலம் திமுக உள்ளிட்ட கட்சிக்கு மாறினார் என்பதும் தனிக்கட்சியும் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று திடீரென அவர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
சமீபத்தில் கே பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது