செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:32 IST)

தீர்ப்பை பொறுத்தவரை நீதி வென்றுள்ளது மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா கருத்து!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான  சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும்  குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் 4 வாரத்திற்குள் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பை அளித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பு சரியானது என்றும் நீதி வென்றுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குறித்து பேசிய ஆச்சார்யா, ’நீதித்துறை சுதந்திரமானது.  அரசியல் சார்பற்றது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நீதிபதிகள் நீதியை நிலைநாட்டிவிட்டனர். சசிகலா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் சசிகலா முதல்வராக பதவியேற்க  முடியாது என்பது உறுதியாகி உள்ளது.