வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (16:27 IST)

அண்ணன் , தங்கையை இப்படி பேசலாமா? பாஜகவின் வெறுப்பு விமர்சனத்திற்கு ஜோதிமணி எம்பி பதிலடி..!

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாஜகவின் ஐ டி விங் பொறுப்பாளர் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து  ஆபாசமாக வெளியிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். . 
 
அரசியல் ரீதியாக ,கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம்.. ஆனால் ஒரு அண்ணன் , தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
பாஜகவின் ஆபாச, வெறுப்பு  அரசியல் தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம்.  இன்று பிரியங்கா காந்தி நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக , அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிராது. இனிமேலாவது  பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 
Edited by Siva